Thursday, April 24, 2008

"டைம்ஸ் ஆப் இந்தியா" தமிழகத்தை குறி வைத்தது ஏன்?

டைம்ஸ் ஆப் இந்தியா’-வின் சென்னை பதிப்பு சமீபத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கியது . இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிகையான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நீண்ட காலம் கழித்து தமிழகத்துக்குள் நுழைந்திருக்கிறது. இதில் அப்படி என்ன புதுமை? இந்தியா முழுவதும் அதன் பதிப்புகள் புகழ்பெற்று விற்பனையில் முன்னிலை வகிக்கும் போது தமிழகத்தில் நுழைய காரணம் என்ன ?கொஞ்சம் பின்னணி பற்றி பார்ப்போம் ... ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிக்கை நிறுவனங்களில் ஒன்று. மேலும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் வரலாறு நூற்றாண்டுகளை கொண்டது. அதன் ஒவ்வோரு பயணத்திலும் இந்தியாவின் ஒன்று வரலாற்றுடன் கலந்தது. கடந்த பிரிட்டீஷ் காலனியால் கொண்டு வந்த பத்திரிக்கை என்ற முத்திரை இருந்தாலும் இந்திய அரசியல் தலைவர்களின் பலரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றது. திலகர் முதல் காந்தியடிகள் வரை ஒன்று சேர்ந்து நடை போட்ட பெருமை கொண்டது. சுதந்திர இந்தியாவில் நேருவுடன் பயணித்த பத்திரிக்கை.நவம்பர் 3 ஆம் நாள் 1938 ஆண்டு ‘த பாம்பாய் டைம்ஸ் ஆப் ஜெர்னல் ஆப் காமர்ஸ்’- என்று பொருளாதார பெயருடன் வந்த இந்த பத்திரிகை ஆங்கிலத்தில் வந்தாலும் ஆங்கிலேயரை விரட்டும் பணியில் ஈடுபட்ட சுதந்திர வீரர்களின் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுநிலை தவறாமல் இருந்து வந்தது. மும்பை நகரத்தில் வளர்ச்சியிலும் இதன் பங்கு அதிகம் பொருளாதார தலைநகரான மும்பைக்கு எந்த பக்கமும் சாராமல் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்தும் பொறுப்பை ஏற்று திறம்பட செய்து இன்று உலக வரை படத்தில் மும்பைக்கும் முக்கியத்துவம் தந்த ஒரு பத்திரிக்கை என்று சொன்னாலும் அது மிகையாகாது. கடந்த வார கடைசி அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவரை சந்தித்து தமிழக வரவு பற்றி கேட்ட போது :-“கடந்த ஐந்து வருடங்களாக தென் இந்தியாவில் ஆங்கில பத்திரிக்கை விற்பனையில் எந்த மாற்றமும் இல்லாதது ஆய்வில் தெரிய வந்தது. மேலும் தென் இந்தியாவில் தமிழக மாவட்டங்களில் ஆங்கில பத்திரிக்கைகள் விற்பனையில் மந்த நிகழ்வு ஏன் என்று ஆராயும் போது பத்திரிக்கைகளின் போக்கில் எந்த மாற்றமும் இல்லாதது முக்கிய காரணமென தெரிய வந்தது. இதனால் 2007 – ஆம் ஆண்டில் பெங்களுரில் எங்கள் பதிப்பை வெளியிட்டு அதை சென்னைக்கு கொண்டு செல்லும் போது அதன் வரவேற்ப்பு நாங்கள் எதிர்பார்த்தை விட அதிகமாககும் என்று கருதினோம். இதனால் 2009 ஆண்டில்தான் எங்கள் பத்திரிகையை சென்னையில் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஒரு வருடத்திற்க்கு முன்னதாகவே தமிழக மக்கள் எங்களை வரவழைத்து விட்டனர்” - என்று அவர் தெரிவித்தார்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home