Thursday, April 24, 2008

இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ்

இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் கொல்கட்டாவில் தனது புதிய மேம்பாட்டு மையத்தை ரூ. 500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளது.இந்த மையம் அமைவதால் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.மேற்கு மாநிலத்தில் காணப்படும் அதிக திறன் வல்லுநர்களாலும், முதலீடுகளை மாநில அரசு ஈர்ப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாலும் கொல்கட்டாவில் இந்த மையத்தை அமைக்க முடிவு செய்ததாக இன்ஃபோசிஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கிய இடமாக விளங்குவதாகவும் அவர் கூறினார்.கோபால கிருஷ்ணனுடன், இன்ஃபோசிஸ் வாரிய உறுப்பினர் மோகன்தாஸ் பாயும் மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைச் சந்தித்துப் பேசினார்கள்.இந்த மேம்பாட்டு மையத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் மேலும் இதுபோன்ற ஐ.டி தொடர்பான முதலீடுகள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் மேற்கு வங்க மாநில தகவல் தொழில்நுட்பத்துறை பொறுப்பு வகிக்கும் தேபேஷ் தாஸ் தெரிவித்தார்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home