Thursday, May 8, 2008

+2 தே‌ர்‌வி‌ல் நாம‌க்க‌ல் மாண‌வி, செ‌ங்க‌ல்ப‌ட்டு மாணவ‌ன் முத‌லிட‌ம்!

பிளஸ் 2 தேர்‌வி‌ல் நாமக்கல்லை சேர்ந்த மாணவி தரணி மற்றும் செங்கல்பட்டை சேர்ந்த மாணவர் ராஜேஷ்குமார் ஆகியோர் தலா 1182 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று பிளஸ் 2 தேர்வு முடிவை த‌மிழக அரசின் தேர்வுத் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டார்.இதில் தமிழை முதல் பாடமாக கொண்டு படி‌த்த நாமக்கல்லை சேர்ந்த மாணவி தரணி, செங்கல்பட்டை சேர்ந்த மாணவர் ராஜேஷ்குமார் ஆகியோர் 1200க்கு 1182 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரம்யா, நாமக்கல்லை சேர்ந்த குமார்விக்ரம் ஆகியோர் 1200க்கு 1181 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.நாமக்கல்லை சேர்ந்த மாணவி தீபா 1180 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.தமிழ் அல்லாத வேறு பாடங்களை முதல் பாடமாக எடுத்து பயின்றவர்களில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த மாணவி ஆஷா கணேசன் 1200க்கு 1191 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த மாணவர் முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், கோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் ஹரிஷ் ‌சி‌றிராம் 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Labels: ,

Tuesday, May 6, 2008

இந்த ஆண்டு புதிதாக 5 பொறியியல் கல்லூரிகள்

சென்னை,6 மே 2008

தமிழகத்தில் விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்த ஆண்டு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்க குறிப்பை அவர் தாக்கல் செய்து கூறுகையில், "தமிழகத்தில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததன்படி, 2008-09-ம் ஆண்டில் விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய ஐந்து இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. இந்தக் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகங்கள் தொடங்கும்" என்றார்.
"மாறுபட்ட பாடத்திட்டங்களாலும், தேர்வு முடிவுகளில் மதிப்பீட்டு மாறுபாடுகளாலும், மதிப்பெண்கள் சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தாலும், மாணவர்கள் படும் சிரமத்தை களைய உயர் கல்வித்துறையின் கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் குறித்த நேரத்தில் தேர்வுகளை நடத்தவும், தேர்வு முடிவுகளை அறிவிக்கவும், வகை செய்யும் விதத்தில் தேர்வு அட்டவணையை கொண்டு வருவதற்கு அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று அவர் கூறினார்.
கலை மற்றும் அறிவியல் பாடங்களை பயிலும் மாணவர்களில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர், படிப்பு முடித்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பு பெற முடியாத நிலையில் உள்ளனர் என்று கூறிய அவர், "இம்மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற உதவும் வகையில் கூடுதலாக தொழில் சார் படிப்பை அரசு உருவாக்கி இருக்கிறது. இந்த கல்வி ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.

இந்திய அரசின் கணினிகளை வேவுபார்க்கும் சீன ஹாக்கர்கள்

பீஜிங்கின் இந்தியத் தூதரகத்தின் இணையதளமும், அதன் இணையப் பயனர் செயலிகளும் சீன மென்பொருள் விஷமிகளால் ஊடுருவப்பட்டுள்ளன. இது தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிகிறது. இந்திய இராணுவம் சம்பந்தப்பட்ட தகவல்களை இந்த ஹாக்கர்கள் தேடுவதாகவும் தெரியவந்துள்ளது.

சீனாவின் திட்டமிட்ட இணையப் போர்முறை (Cyber War) ஐ.நாவிற்கு கவலை தந்துள்ளது. 2050ற்குள் இணையம்(Internet technology) உலகின் எந்த இராணுவத்தையும் இடைமறித்து ஸ்தம்பிக்கச் செய்யும் திறனைப் பெறுவது சீனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பாகும்.
தகவல் தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியா சீனாவின் இந்த சவாலை சந்திப்பதில் தடுமாறுவதற்கு அடிப்படைக் காரணம் சீனா தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதேயாகும் எனக் கருதப்படுகிறது.

Monday, May 5, 2008

Robot trumpets Toyota's know-how

A trumpet-playing robot has been developed by Japanese car maker Toyota.

It showed off its musical creation at a Tokyo hotel, where the robot played When You Wish Upon a Star on a trumpet.

The machine is the latest in a series of robots developed by Japanese companies to showcase their prowess in humanoid robotics.

Sony and Honda have both used humanoid robots to as a platform to demonstrate their computing power and engineering know-how.

Robot wars

The Toyota robot stands 120 cm (48 inches) tall and does not yet have a cute name yet, unlike some of its rivals.

The company has provided few specific details about the technology used for the machine and did not reveal how much it spent developing the robot.

The robot has yet to be given a cute name

For now, it has no plans to sell or rent it. Instead it hopes to form a robot band to play at the 2005 World Exposition, being held in Aichi in central Japan.

"I'm confident that this will be a symbol of Toyota Group's technology," said Toyota President Fujio Cho.

The robot development race is highly competitive in Japan, with the market for bots estimated to be worth around $4.5bn.

Companies often use the humanoid models to generate publicity and highlight a company's technical abilities.

Rival car maker Honda has a walking robot called Asimo which has visited the UK, Germany, the Czech Republic, France and Ireland as part of a world tour.

For its part, Sony has the all-singing and all-dancing Qrio, which can jog at a top speed of 14 metres per minute.

It seems to have musical bent, having recently appeared for a photo opportunity conducting the Tokyo Philharmonic Orchestra.

Whether it will be leading Toyota's robot musicians in the future is unknown.

Saturday, May 3, 2008

Mukesh Ambani’s new home Antilia

mukesh-ambaniMukesh Ambani’s new house Antilia is under construction right  now and is said to have 27 floors with 600 full staff to be working in the whole building.The height of these 27 floors would be equivalent to 60 floors of a normal building/apartment. The current residence of mukesh ambani is at Cuffe Parade. The new ambani’s home would have 3 helipads , Six floors for parking, a full floor for car maintenance, Balconies with gardens , Entertainment floor with 50 people seating floor, a refuge floor which would come in use in emergencies, facilities for athletics and a swimming pool, 2 full floors made of glass-front especially for guests of ambanis though BMC(Brihanmumbai Municipal Corporation) officials have announced that the helipad permissions have not yet been granted.

Mukesh Ambani bought the Antilia 49,000 square foot plot in year 2002 and the whole construction will rise to 570 feet with the height of 60 floors though the real contruction would be of just 27 floors. The construction is at Altamount Road where the current land rates are at 75000Rs/square feet and 6 floors are already completed with the whole construction to be completed by september 2008.The top four floors, with a panoramic view of the city and the Arabian Sea beyond, are expected to be for Ambani, his wife Nita, mother Kokilaben and the couple’s three kids.

According to BMC records, the total area of Mukesh’s Altamount Road plot is 4,532.39 square meters. The proposed built-up area is 4,778.09 square meters (only for residential purposes), and the permissible built-up area 4,939.81 square meters. Lets see what anil ambani is planning after seeing mukesh ambani’s upcoming big house and sucess of reliance companies held by mukesh.

The current news is that mukesh ambani has already reached 50billion dollar level and will soon beat software kind bill gates, and this is the reason anil ambani is all get set to start Reliance Power IPO which is expected to come by october 2007.Anil ambani can also expect a heavy premium on the shares to be issued with many times over subscription of the shares. Lets see by the year end which ambani brother wins this money battles and stays in the top.

mukesh-ambani-antilia-reliance-plan1

mukesh-ambani-antilia-reliance-plan2

mukesh-ambani-antilia-reliance-plan3

mukesh-ambani-antilia-reliance-plan4

Thursday, April 24, 2008

இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ்

இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் கொல்கட்டாவில் தனது புதிய மேம்பாட்டு மையத்தை ரூ. 500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளது.இந்த மையம் அமைவதால் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.மேற்கு மாநிலத்தில் காணப்படும் அதிக திறன் வல்லுநர்களாலும், முதலீடுகளை மாநில அரசு ஈர்ப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாலும் கொல்கட்டாவில் இந்த மையத்தை அமைக்க முடிவு செய்ததாக இன்ஃபோசிஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கிய இடமாக விளங்குவதாகவும் அவர் கூறினார்.கோபால கிருஷ்ணனுடன், இன்ஃபோசிஸ் வாரிய உறுப்பினர் மோகன்தாஸ் பாயும் மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைச் சந்தித்துப் பேசினார்கள்.இந்த மேம்பாட்டு மையத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் மேலும் இதுபோன்ற ஐ.டி தொடர்பான முதலீடுகள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் மேற்கு வங்க மாநில தகவல் தொழில்நுட்பத்துறை பொறுப்பு வகிக்கும் தேபேஷ் தாஸ் தெரிவித்தார்.

Labels: , ,

"டைம்ஸ் ஆப் இந்தியா" தமிழகத்தை குறி வைத்தது ஏன்?

டைம்ஸ் ஆப் இந்தியா’-வின் சென்னை பதிப்பு சமீபத்தில் மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கியது . இந்தியாவின் முன்னணி ஆங்கில பத்திரிகையான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நீண்ட காலம் கழித்து தமிழகத்துக்குள் நுழைந்திருக்கிறது. இதில் அப்படி என்ன புதுமை? இந்தியா முழுவதும் அதன் பதிப்புகள் புகழ்பெற்று விற்பனையில் முன்னிலை வகிக்கும் போது தமிழகத்தில் நுழைய காரணம் என்ன ?கொஞ்சம் பின்னணி பற்றி பார்ப்போம் ... ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, இந்தியாவின் ஒரு முன்னணி பத்திரிக்கை நிறுவனங்களில் ஒன்று. மேலும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் வரலாறு நூற்றாண்டுகளை கொண்டது. அதன் ஒவ்வோரு பயணத்திலும் இந்தியாவின் ஒன்று வரலாற்றுடன் கலந்தது. கடந்த பிரிட்டீஷ் காலனியால் கொண்டு வந்த பத்திரிக்கை என்ற முத்திரை இருந்தாலும் இந்திய அரசியல் தலைவர்களின் பலரின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றது. திலகர் முதல் காந்தியடிகள் வரை ஒன்று சேர்ந்து நடை போட்ட பெருமை கொண்டது. சுதந்திர இந்தியாவில் நேருவுடன் பயணித்த பத்திரிக்கை.நவம்பர் 3 ஆம் நாள் 1938 ஆண்டு ‘த பாம்பாய் டைம்ஸ் ஆப் ஜெர்னல் ஆப் காமர்ஸ்’- என்று பொருளாதார பெயருடன் வந்த இந்த பத்திரிகை ஆங்கிலத்தில் வந்தாலும் ஆங்கிலேயரை விரட்டும் பணியில் ஈடுபட்ட சுதந்திர வீரர்களின் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுநிலை தவறாமல் இருந்து வந்தது. மும்பை நகரத்தில் வளர்ச்சியிலும் இதன் பங்கு அதிகம் பொருளாதார தலைநகரான மும்பைக்கு எந்த பக்கமும் சாராமல் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்தும் பொறுப்பை ஏற்று திறம்பட செய்து இன்று உலக வரை படத்தில் மும்பைக்கும் முக்கியத்துவம் தந்த ஒரு பத்திரிக்கை என்று சொன்னாலும் அது மிகையாகாது. கடந்த வார கடைசி அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவரை சந்தித்து தமிழக வரவு பற்றி கேட்ட போது :-“கடந்த ஐந்து வருடங்களாக தென் இந்தியாவில் ஆங்கில பத்திரிக்கை விற்பனையில் எந்த மாற்றமும் இல்லாதது ஆய்வில் தெரிய வந்தது. மேலும் தென் இந்தியாவில் தமிழக மாவட்டங்களில் ஆங்கில பத்திரிக்கைகள் விற்பனையில் மந்த நிகழ்வு ஏன் என்று ஆராயும் போது பத்திரிக்கைகளின் போக்கில் எந்த மாற்றமும் இல்லாதது முக்கிய காரணமென தெரிய வந்தது. இதனால் 2007 – ஆம் ஆண்டில் பெங்களுரில் எங்கள் பதிப்பை வெளியிட்டு அதை சென்னைக்கு கொண்டு செல்லும் போது அதன் வரவேற்ப்பு நாங்கள் எதிர்பார்த்தை விட அதிகமாககும் என்று கருதினோம். இதனால் 2009 ஆண்டில்தான் எங்கள் பத்திரிகையை சென்னையில் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஒரு வருடத்திற்க்கு முன்னதாகவே தமிழக மக்கள் எங்களை வரவழைத்து விட்டனர்” - என்று அவர் தெரிவித்தார்.

Labels: , ,